சீனாவின் 'லோங் மார்ச்' எனும் ராக்கெட்டின் சிதைவுகள் மலேசியாவின் சராவாக் மாநிலத்தின் வானில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ராக்கெட் மீண்டும் உலகிற்குத் திரும்புவதை சராவாக் மாநிலத்தில் பலர் கண்டிருக்கின்றனர்.
'லோங் மார்ச் 5பி' ராக்கெட் ஞாயிற்றுக்கிழமையன்று மீண்டும் உலகிற்குள் நுழைந்ததை அமெரிக்காவின் 'நாசா' எனும் அமெரிக்க விண்வெளி நிலையம் உறுதிப்படுத்தியது.
இந்நிகழ்வு பதிவான காணொளிகளை சராவாக்கின் குச்சிங், சிபு, பின்டுலு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பகிர்ந்துகொண்டனர்.

