பைடனுக்கு மீண்டும் கொவிட்-19 தொற்று

பைடனுக்கு மீண்டும் கொவிட்-19 தொற்று

1 mins read
81252e16-9d76-4795-b449-3ec931eafd83
ஜூலை 27ஆம் தேதியன்று திரு பைடன். படம்: நியூயார்க் டைம்ஸ் -

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

கொவிட்-19க்கான 'பேக்ஸ்லோய்ட்' எனும் மாத்திரையை உட்கொள்வோரில் ஒருசிலருக்கு மீண்டும் கிருமித் தொற்று ஏற்படலாம்; அத்தகையோரில் திரு பைடனும் ஒருவர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

ஜூலை மாதம் 21ஆம் தேதியன்று பைடனுக்கு முதலில் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதியானது.

அதற்குப் பிறகு கடந்த புதன்கிழமை (27 ஜூலை) வரை அவர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இப்போது திரு பைடன் மீண்டும் தனிமையில் இருப்பார்.