லெபனானில் ரொட்டி வாங்க திண்டாட்டம்

லெபனானில் ரொட்டி வாங்க திண்டாட்டம்

1 mins read
9c601882-cc16-4b6b-a5ab-5c604483afd8
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் ஒரு கடையில் ரொட்டி வாங்க திரண்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ் -

லெபனானில் ரொட்டி வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் பல மணிநேரம் வரிசையில் நிற்கவேண்டிய நிலை உருவெடுத்துள்ளது.

ரொட்டி வாங்கப் போதிய பணம் இல்லாதோரும் இருக்கின்றனர்.

2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு முன்பு லெபனானின் வங்கித் துறை சிறப்பாகச் செய்துகொண்டிருந்தது.

'மத்தியக் கிழக்குப் பகுதியின் சுவிட்சர்லாந்து' என்றுகூட இந்நாடு அழைக்கப்பட்டது.

இப்போது லெபனான் மக்களின் அடிப்படை உணவான ரொட்டியை வாங்குவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

லெபனான் நொடித்துப் போய்விட்டதால் அமெரிக்க டாலருக்கு எதிரான அதன் நாணயத்தின் மதிப்பு சுமார் 90 விழுக்காடு சரிந்துள்ளது.

ரொட்டி விற்கும் கடைகளில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் ரொட்டி கேட்டு சில வாடிக்கையாளர்கள் துப்பாக்கியால் சுட்டு மிரட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

லெபனானின் ஐவரில் நால்வர் வறுமையில் தவிப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கணித்துள்ளது.