பிரிட்டிஷ் இளவரசர் சார்லசின் அறநிறுவனம் ஒசாமா பின்லேடன் குடும்பத்திடமிருந்து ஒரு மில்லியன் பவுண்ட் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2013ல் அறநிறுவனத்துக்கு ஒசாமா பின்லேடனுடைய மாற்றான் சகோதரர்கள் நன்கொடை வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. நன்கொடையை இளவரசர் சார்லசே பெற்றுகொண்டதாகக் குறிப்பிடப்பட்டது.
அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன். 2011ல் ஒசாமா சுட்டுக்கொல்லப்பட்டான்.
சவூதி அரேபியாவின் செல்வாக்கு பெற்ற குடும்பங்களில் பின்லேடன் குடும்பமும் ஒன்று. அந்நாட்டின் அரச குடும்பத்துடன் பின்லேடன் குடும்பத்துக்கு நெருங்கிய தொடர்புகள் உண்டு.
ஒசாமாவின் மாற்றான் சகோதரர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் எந்த வகையிலும் ஈடுப்பட்டதற்கு ஆதாரம் இல்லை. அதோடு, பயங்கரவாதத்தில் ஈடுப்பட்டதற்காக ஒசாமாவுடன் தொடர்புகள் அவனுடைய குடும்பம் 1994ல் துண்டித்துகொண்டது.
தனது ஆலோசகர்கள் நன்கொடையை பெற்றுகொள்ள எதிர்ப்பு தெரிவித்திருந்தபோதும், அதை இளவரசர் சார்லஸ் ஏற்றுகொண்டதாகக் கூறப்பட்டது.
இந்தத் தகவலை அரசு அலுவலகத்தினர் மறுத்துள்ளனர்.