தாய்லாந்தில் ஒரு கடையிலிருந்து திருடிய ஒருவர் காவல் துறையினரால் பிடிப்பட்டார். விசாரித்ததில், அந்த ஆடவர் வேண்டுமென்றே அகப்பட்டதாகத் தெரியவந்தது. சமூகத்தில் வாழ்வதற்கு பணம் இல்லாததால், சிறைக்கு செல்வதே சிறந்தது என்று அவர் முடிவெடுத்துள்ளார்.
60 வயதான ஃபீ என்பவர் ஒரு மருந்தகத்திலிருந்து மூன்று சோப்புக்கட்டிகளை திருடினார். அதன் மதிப்பு 51 பாட் ($1.94). திருடப்பட்ட பொருள்களின் மதிப்பு மிக சொற்பமாக இருந்ததால், கடையில் இருந்த மற்றவர்கள் அதற்கு பணம் கொடுக்க முன்வந்தனர். ஆனால் ஆடவர் அதை மறுத்துவிட்டார்.
கடையில் இருந்து ஒருவரிடம் அவர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். தனக்கு வேலை இல்லை என்றும், பட்டினியால் வாடுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் சிறைக்கு செல்வதே மேல் என்றுள்ளார் அவர். சிறையில் மூன்று வேளை உணவு கிடைக்கும்; ஆதரவாக பேசுவதற்கு நண்பர்கள் இருப்பர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால், பசியில் மடியவேண்டும் என்று கூறியுள்ளார் ஃபீ.
ஆடவர் விருப்பப்பட்டபடி அவர் சிறைக்கு அனுப்பட்டாரா என்று தகவல் இல்லை.

