சலவை இயந்திரத்தில் சிறுவனின் சடலம்

சலவை இயந்திரத்தில் சிறுவனின் சடலம்

1 mins read
f69f2655-579d-4253-9340-6c30903c7725
மாண்ட சிறுவன் டிரோய் (படம்: டுவிட்டர்) -

ஒரு ஏழு வயது சிறுவனின் சடலம் சலவை இயந்திரத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன் அச்சிறுவன் வீட்டிலிருந்து காணாமல்போய்விட்டதாக அவனுடைய பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர்.

அமெரிக்காவின் டெக்சஸஸ் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சில தினங்களுக்கு முன், சிறுவன் வீட்டிலில் காணவில்லை என்று அறிந்த அவனுடைய பெற்றோர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

வீட்டை சோதனையிட்டதில், துணி துவைக்கும் இயந்திரத்தில் சிறுவன் மாண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டான். சிறுவன் மாண்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அவன் இயந்திரத்தில் விழுந்து இறந்தானா, கொலை செய்யப்பட்டு இயந்திரத்தில் வைக்கப்பட்டானா என்பது தெளிவாக தெரியவில்லை என்று காவல் துறை அதிகாரிகள் கூறினர்.

சிறுவனுடைய பெற்றோர் விசாரிக்கப்பட்டதில், அவன் 2019ஆம் ஆண்டு அந்த தம்பதியால் தத்தெடுக்கப்பட்டதாக தெரியவந்தது.