ஐநா விசாரணைக்கு ரஷ்யா அழைப்பு

ஐநா விசாரணைக்கு ரஷ்யா அழைப்பு

2 mins read
7111b9b1-9667-41cf-808e-a35e55a0d2bf
-

மாஸ்கோ: ரஷ்ய ஆத­ரவு பிரி­வி­னை­வா­தி­க­ளால் சிறை­பி­டிக்­கப்­பட்ட உக்­ரே­னிய போர்க்­கை­தி­கள் பல­ரது மர­ணம் தொடர்­பில் விசா­ரணை நடத்­து­மாறு ஐக்­கிய நாட்டு மன்­றம் மற்­றும் செஞ்­சி­லு­வைச் சங்க வல்லு­நர்­க­ளுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்­துள்­ளது.

அமெ­ரிக்­கத் தயா­ரிப்­பான 'ஹிமார்ஸ்' ஏவு­க­ணை­யைக் கொண்டு உக்­ரேன் ராணு­வம் நடத்­திய தாக்­கு­த­லில் உக்­ரே­னிய போர்க்­கை­தி­கள் 50 பேர் மாண்­டு­போ­ன­தா­க­வும் மேலும் 73 பேர் காய­முற்­ற­தா­க­வும் ரஷ்­யத் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

ஆனால், ரஷ்­யா­வின் குற்­றச்­சாட்டை உக்­ரேன் மறுத்­துள்­ளது. சிறை­யில் இடம்­பெற்ற அத்­து­மீ­றல்­களை மறைப்­ப­தற்­காக ரஷ்ய ராணு­வமே அத்­தாக்­கு­தலை நடத்­தி­விட்டு, இப்­போது நாட­க­மா­டு­வ­தா­க­வும் உக்­ரேன் சாடி­யது.

இந்­நி­லை­யில், இரு­நா­டு­களும் இணங்­கி­னால் போர்க்­கை­தி­கள் மர­ணம் குறித்து விசா­ரிக்க தன் வல்­லு­நர்­களை அனுப்­பத் தயார் என்று ஐநா தெரி­வித்­துள்­ளது.

மக்கள் வெளி­யேற வேண்­டு­கோள்

இவ்­வே­ளை­யில், உக்­ரே­னின் கிழக்­குப் பகு­தி­யான டோன்­பா­சில் கடும் சண்டை நடந்­து­வ­ரும் நிலை­யில், அங்­குள்ள தன் நாட்டு மக்­களை உட­ன­டி­யாக வெளி­யே­றும்­படி உக்­ரேன் அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலன்ஸ்கி வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

இன்­னும் பல நூறா­யி­ரக்­க­ணக்­கா­னோர் டொனட்ஸ்க், லுகான்ஸ்க் மாநி­லங்­களில் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட ஸெலன்ஸ்கி, அவர்­களில் பலர் அங்­கி­ருந்து வெளி­யேற மறுத்து­வ­ரு­வ­தா­க­வும் சொன்­னார்.

இத­னி­டையே, மின்­னல் வேகத்­தில் செல்­லக்­கூ­டிய 'ஹைப்­பர்­சோனிக் ஸிர்­கான்' ஏவு­க­ணை­களை அடுத்த சில மாதங்­களில் ரஷ்­யக் கடற்­படை பெறும் என்று அந்­நாட்டு அதி­பர் விளாடி­மிர் புட்­டின் தெரி­வித்­துள்­ளார்.

செயின்ட் பீட்­டர்ஸ்­பர்க் நக­ரில் நடந்த ரஷ்­யக் கடற்­படை நாள் விழா­வில் கலந்­து­கொண்டு பேசி­ய­போது அதி­பர் புட்­டின் இதனை அறி­வித்­தார்.

ஹைப்­பர்­சோ­னிக் ஏவு­க­ணை­கள் ஒலி­யைப்­போல் ஒன்­பது மடங்கு வேகத்­தில் செல்­லக்­கூ­டி­யவை. கடந்த ஓராண்­டாக போர்க்­கப்­பல்­களில் இருந்­தும் நீர்­மூழ்­கிக்­கப்­பல்­களில் இருந்­தும் ரஷ்யா அவற்­றைச் சோதித்­துப் பார்த்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.