ஆற்றில் மீன்பிடித்தவரை இழுத்துச் சென்ற முதலை

ஆற்றில் மீன்பிடித்தவரை இழுத்துச் சென்ற முதலை

1 mins read
a3a24a40-7662-4a4d-8ab6-dc9efa64dd23
-

கோத்தா கின­பாலு: ஆற்­றில் குடும்­பத்­தி­ன­ரு­டன் சேர்ந்து மீன்­பி­டித்­துக்­கொண்­டி­ருந்த பெண்­ணைத் தாக்கி முதலை இழுத்­துச் சென்ற சம்­ப­வம் மலே­சி­யா­வின் கின­பாத்­தாங்­கான் மாவட்­டத்­தில் நிகழ்ந்­தது.

நேற்று முன்­தி­னம் பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் முத­லை­யால் இழுத்துச் செல்­லப்­பட்ட நோர்­சிலா சாயோங், 32, என்ற அப்­பெண்­ணின் உடலை நேற்றுக் காலை 7 மணி­அள­வில் கிரா­ம­வாசி­கள் கண்­ட­னர்.

கடை­சி­யாக அவர் காணப்­பட்ட இடத்­தி­லி­ருந்து 800 மீ. தொலைவில் அவ­ரது உடல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. தங்­கள் கண்­ணெ­திரே நோர்­சிலாவை அந்­தப் பெரிய முத­லை கவ்­விச்­சென்­ற­போ­தும் அவ­ரின் குடும்­பத்­தி­ன­ரால் அப்­பெண்­ணைக் காப்­பாற்ற முடி­ய­வில்லை.

நோர்­சி­லா­வைப் பிடித்து இழுத்து முத­லை­யின் பிடி­யி­லி­ருந்து விடு­விக்க அவ­ரின் குடும்­பத்­தி­னர் முயன்­ற­னர். ஆனால், அள­வி­லும் வலி­மை­யி­லும் முதலை பெரி­ய­தாக இருந்­த­தால் அவர்­க­ளின் முயற்சி ஈடே­ற­வில்லை.

அம்­மு­த­லை­யின் தலை மட்­டும் ஒரு சிறிய படகு அள­விற்கு இருக்­கும் என்று உள்­ளூர்­வா­சி­கள் குறிப்­பிட்­ட­னர். கடந்த சில கால­மா­கவே அம்­மு­த­லை­யைத் தாங்­கள் கண்­டுள்­ள­தா­கப் பல­ரும் கூறி­னர்.

இந்­நி­லை­யில், அம்­மு­த­லை­யைப் பிடிக்­கும் முயற்­சி­யில் வனத்­துறை அதி­கா­ரி­கள் இறங்­கி­யுள்­ள­தாக அறி­யப்­ப­டு­கிறது என்று 'தி ஸ்டார்' செய்தி தெரி­விக்­கிறது.