அமைச்சர் ஓங்: சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று அலை மேலும் தணியும்

அமைச்சர் ஓங்: சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று அலை மேலும் தணியும்

1 mins read
6ea3425c-7c56-41a9-952c-1f15d3a19172
-

சிங்கப்பூரில் தற்போது நிலவி வரும் கொவிட்-19 அலையில் பிஏ.5 திரிபு முக்கிய உந்துசக்தியாக அமைந்துள்ளது என்றும் இந்த அலை வரும் வாரங்களில் தணியக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.

நம் நாடு தற்போதைய அலையில் நடுவே இருந்தாலும் தொற்று எண்ணிக்கை கடந்த 10 நாள்களாகக் குறைந்துகொண்டே வந்துள்ளது என்றும் வாரந்திர அடிப்படையில் கடந்த வாரம் தொற்று விகிதம் 0.9க்கும் குறைவாக உள்ளது என்றும் அவர் இன்று( ஆகஸ்ட் 1) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதைய கொவிட்-19 அலையின்போது சிங்கப்பூர் தனது சமூக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கடுமையாக்கத் தேவை ஏற்படவில்லை என்றும் பெரும்பாலான மக்கள் தங்கள் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்றும் அமைச்சர் சுட்டினார்.

எனினும் நமது மருத்துவமனைகளில் வாழ்க்கை வழக்கமாக இல்லை என்ற அமைச்சர் தற்போதைய கொவிட்-19 அலையின் முழு தாக்கத்தையும் நமது மருத்துவ சுகாதாரக் கட்டமைப்பு தாங்கிக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.