சீனாவுக்கு சொந்தமான பெரிய ராக்கெட் ஒன்று விண்வெளியிலிருந்து மண்ணுக்குள் வீழ்ந்துள்ளது.
சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த லாங் மார்ச் 5பி எனும் ராக்கெட்டிலிருந்த 25 டன் எடை கொண்ட பூஸ்டர் பாகங்கள் சிதைந்து விண்ணிலிருந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்தது.
அதனை மலேசியாவிலிருந்த மக்களால் பார்க்க முடிந்தது. குறிப்பாக மலேசியாவின் குச்சிங் மாநிலத்தைச் சேர்ந்த நஸ்ரி சுலைமான் காணொளி ஒன்றை எடுத்து டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.
சீனா, விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. அண்மையில் அந்த விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.
2 டன் எடை மற்றும் 176 உயரம் கொண்ட இந்த ராக்கெட், செயற்கை கோளை நிலை நிறுத்திவிட்டது. இந்த நிலையில் ராக்கெட்டில் இருந்தது பூஸ்டர் பாகங்கள் என்றும் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
செயற்கைகோள், விரும்பிய திசையில் செல்ல உதவ பூஸ்டர்கள் அனுப்பப்படும். அந்த பூஸ்டரின் ஒரு பகுதிதான் பூமியில் விழ உள்ளது என்றும் அந்த பாகங்கள் மிகப் பெரியதாக இருப்பதால் புவி மண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பல் ஆகாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
விண்ணில் ஏவப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு சீன ராக்கெட்டின் பாகங்கள் இன்று பூமியில் விழும் என்றும் ஆனால் எந்தப் பகுதியில் விழும் என்று தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ராக்கெட் பாகங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்த நிலையில் சீன ராக்கெட் பாகங்கள் இன்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. தென்கிழக்கு ஆசியாவில் பூமியின் வளிமண்டலத்தின் வழியாக கடும் வேகத்தில் வந்த ராக்கெட் பாகங்கள் கடலில் விழுந்தது.
இதனை நாசா எனும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உறுதிபடுத்தியது. அதேவேளையில் சீனா எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று கவலை தெரிவித்தது.
தகவல்களைப் பகிர்ந்துகொள்ளாததால் இதை சீனாவின் மிகவும் பொறுப்பற்ற செயல் என்றும் ஆபந்து மிக்கது என்றும் நாசா கூறியது

