மகாதீர் தலைமையில் புதிய கூட்டணி

புத்­ராஜெயா: மலே­சிய முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முக­மது அடுத்­தப் பொதுத் தேர்­த­லுக்­கான நான்கு சிறிய கட்­சி­கள் அடங்­கிய புதிய கூட்­ட­ணியை அமைத்­துள்­ளார். இக்கூட்டணி 120 தொகு­தி­களில் போட்­டி­யி­டு­ம் என்று தெரி­கிறது.

கெராக்கான் தானா ஆயர் எனும் அந்­தக் கூட்­ட­ணி­யின் வேட்­பா­ளர்­கள் மலாய் வாக்­கு­கள் அதி­கம் உள்ள தொகு­தி­களில் போட்­டி­யிடு­வார்­கள் எனச் செய்­தி­யா­ளர் சந்­திப்பு ஒன்­றில் பேசிய மகா­தீர் சொன்­னார்.

இக்­கூட்­ட­ணி­யில் மகா­தீ­ரின் பெஜு­வாங் தானா ஆயர் கட்சி, முன்­னாள் துணைப் பிர­த­மர் இப்­ரா­ஹிம் அலி­யின் பூமி­புத்ரா பெர்­காசா மலே­சி­யக் கட்­சி­யும் (புத்ரா) பாரி­சன் ஜமாஆ இஸ்­லா­மியா செ-மலே­சி­யக் கட்­சி­யும் (பெர்­ஜசா) தேசிய இந்­திய முஸ்­லிம் கூட்­டணி கட்­சி­யும் (இமான்) அங்­கம் வகிக்­கின்­றன.

இந்­தப் புதிய கூட்­ட­ணி­யில் அரசு சாரா நிறு­வ­னங்­களும் கல்­வி­யா­ளர்­களும் உள்­ள­தாக 97 வயது மகா­தீர் சொன்­னார். பிர­த­மர் வேட்­பா­ள­ராக யாரும் இது­வரை முன்­மொ­ழி­யப்­ப­ட­வில்லை என்­றார் அவர்.

மலே­சி­யா­வின் 222 நாடா­ளு­மன்ற தொகு­தி­க­ளுக்­கான தேர்­தலை நடத்த அடுத்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் வரை கால அவ­கா­சம் உள்­ளது. ஆனால், அடுத்த சில மாதங்­களில் பொதுத் தேர்­தல் நடத்­தப்­ப­டக்­கூ­டும் என்று யூகங்­கள் வலம் வரு­கின்­றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!