மலேசியாவிலிருந்து வாரந்தோறும் கிட்டத்தட்ட 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவதாக இலங்கை தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவின் கீழ் மலேசியாவுக்கு செல்லும் இலங்கையர்கள் அங்கு சென்றடைந்ததும் தங்கள் விசாவை வேலை அனுமதிச்சீட்டாக மாற்றிகொள்ளலாம் என்று கருதுகின்றனர். அவர்களை குடிநுழைவு அதிகாரிகள் விசாரிக்கும்போது, உண்மை நிலவரம் புலப்படுகிறது. அவர்களை விமான நிலையத்திலே தடுத்துவைத்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். மலேசியாவுக்கு சுற்றுலா விசாவின் கீழ் வரும் இலங்கையர்கள் பலர் மோசமான சூழ்நிலையில் வேலை செய்யும் கட்டாயத்தில் தள்ளபடுகின்றனர். போதிய சம்பளமும் வேலையிடத்தில் உரிமைகளும் கிடையாது. தாங்கள் வேலைதேடி தருபவர்களால் ஏமாற்றபட்டிருப்பதை அப்போதுதான் அவர்கள் அறிந்துகொள்கின்றனர்.
மலசியாவில் முறையான வேலை அனுமதிச்சீட்டு இல்லாதவர்கள் பிடிப்பட்டால், சிறையில் அடைக்கப்படுகின்றனர். தண்டனை காலத்துக்கு பிறகு, சொந்த நாடுக்கு அவர்கள் அனுப்பப்படுகின்றனர்.
மலேசியாவுக்கு வேலைக்காக வருபவர்கள் முறையான வழியில் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.