ஹிரோஷிமா: ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலின் 77வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்று அஞ்சலி நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்பட்டன.
ஹிரோஷிமாவில் உள்ள அமைதிப் பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள்.
இதில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கலந்துகொண்டார்.
ரஷ்யா-உக்ரேன் போரைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள புதிய ஆயுதப் போட்டி குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
"அணுவாயுதங்கள் முட்டாள்தனமானவை. அவற்றால் நிச்சயமாகப் பாதுகாப்பு இல்லை. அவை பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை," என்றார் அவர்.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அமெரிக்காவின் பி-29 ரக போர் விமானம் எனோலா கே, "லிட்டில் பாய்" என்ற புனைப்பெயர் கொண்ட குண்டை வீசி ஹிரோஷிமா நகரத்தை அழித்தது.

