முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் மாளிகையில் சிக்கிய ரகசிய ஆவணங்கள்

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் மாளிகையில் சிக்கிய ரகசிய ஆவணங்கள்

1 mins read
3c39cf60-0d43-4ad4-833b-027ed0846de3
-
multi-img1 of 2

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்பின் மாளிகையில் பல ரகசிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக எப்பிஐ(FBI) தெரிவித்துள்ளது.

டிரம்ப்புக்குச் சொந்தமான மார்-ஏ-லகோ என்ற எஸ்டேட் புளோரிடா மாநிலத்தில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 8ம் தேதி எப்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கடந்த அதிபர் தேர்தலில் தோற்ற டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது ரகசிய ஆவணங்களை பெட்டியில் வைத்து எடுத்து சென்றதாகவும், அந்த ஆவணங்களை இந்த எஸ்டேட்டில் வைத்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ரகசிய ஆவணங்களை கண்டுபிடிப்பதற்காக டிரம்பின் எஸ்டேட்டில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். அதே வேளையில் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிவித்தார்.