குடும்ப பிரச்சினையால் கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி

குடும்ப பிரச்சினையால் கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி

1 mins read
f4c3803b-1dc7-4532-bdca-ca9da41e2db9
துப்பாக்கிச்சூடு தொடங்கிய வீட்டில் காவல் துறையினர் -
multi-img1 of 3

செடின்ஜி: தமது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் கண்ணில் பட்டவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கித் தாக்குதல் நடத்திய நபர் வசித்த வீட்டில் இருந்த ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உள்பட மூவர் கொல்லப்பட்டனர்.

தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மொண்டினேக்ரோ நாட்டின் மெடொவினா நகரில் இன்று(ஆகஸ்ட் 13) துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

34 வயதான நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தினார். தெருவில் நடந்து சென்றவர்கள், கண்ணில் பட்டவர்கள் என அனைவரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார்.

ஒரு வழியாக அந்தப் பகுதியில் இருந்த ஒருவர் அந்த மர்ம நபரைச் சுட்டுக்கொன்றார். ஆனால், அந்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்தது. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.