ரஷ்யாவின் பொருளியல் சரிவுக்குக் காரணமான போர்

ரஷ்யாவின் பொருளியல் சரிவுக்குக் காரணமான போர்

1 mins read
4dad7be3-3e96-4c7b-a0f5-40ca8438084f
-

உக்ரேனுடனான போரின் விளைவாக ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளியல் தடைகள் காரணமாக, அதன் பொருளியல் இவ்வாண்டின் இண்டாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் சுருங்கியது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அதன் பொருளியல் கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க 4% சரிந்தது என்று ரஷ்யாவின் புள்ளிவிவரத்துறை நேற்று முன்தினம் தெரிவித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததற்குப் பிறகு கணக்கிடப்பட்ட காலாண்டு அறிக்கையில் இந்த பொருளியல் சரிவு தென்பட்டுள்ளது.

இவ்வாண்டு முதலாம் காலாண்டில் ரஷ்யாவின் பொருளியல் 3.5% வளர்ச்சி கண்டது.

மேற்கத்திய நாடுகளின் பல்வேறு பொருளியல் தடைகளால் வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க இருப்பு ஆகியவற்றில் தேக்கத்தால் ரஷ்யா அது பெற்று வந்த 600 பில்லியன் அமெரிக்க டாலர் (S$823 பில்லியன்) வருமானத்தில் கிட்டத்தட்ட பாதியை இழக்க நேரிட்டது.