பிரிட்டனின் சில பகுதிகளில் வறட்சி என அறிவிப்பு

பிரிட்டனின் சில பகுதிகளில் வறட்சி என அறிவிப்பு

1 mins read
c127958b-2467-443c-8c2a-ed0903dff817
இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் வறண்டு காணப்படும் போ பீச் நீர்த்தேக்கம். படம்: ஏஎஃப்பி -

லண்­டன்: இங்­கி­லாந்­தின் தெற்கு, கிழக்கு, மத்­திய வட்டா­ரங்­களின் சில பகு­தி­களில் வறட்சி ஏற்­பட்டுள்­ள­தாக பிரிட்­ட­னின் அர­சாங்­கம் அதி­கார­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது. 50 ஆண்­டு­க­ளாக இல்­லாத வறட்­சி­யைச் சமா­ளிப்­ப­தன் தொடர்­பில் அதி­கா­ரி­களும் வல்­லு­நர்­களும் நடத்­திய சந்­திப்­பைத் தொடர்ந்து அறி­விப்பு இடம்­பெற்­ற­தென பிரிட்­ட­னின் தேசிய வறட்­சிக் குழு தெரி­வித்­தது.

பொது­வாக குளிர் நாடா­கக் கரு­தப்­படும் பிரிட்­டன் தொடர்ந்து வர­லாறு காணாத அனல் காற்றை எதிர்­நோக்கி வரு­கிறது.

இங்­கி­லாந்­தின் எட்டு பகு­தி­கள் வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன என்று அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் நீர் நிறு­வ­னங்­க­ளால் மேலும் கடு­மை­யான தண்­ணீர் சேமிப்பு கட்­டுப்­பாடு­க­ளைச் செயல்­ப­டுத்­த­மு­டி­யும்.

தோட்­டங்­க­ளுக்கு நீர் ஊற்­று­வது, வாக­னங்­க­ளைக் கழு­வு­வ­தற்­குத் தண்­ணீ­ரைப் பயன்­ப­டுத்­து­வது போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பல நீர் நிறு­வ­னங்­கள் தற்­கா­லி­க­மா­கத் தடை விதித்­துள்­ளன.

இங்­கி­லாந்து, வேல்ஸ் ஆகி­ய­வற்­றின் தெற்­குப் பகு­தி­கள் சில படு­மோ­ச­மான அனல் காற்றை எதிர்­நோக்­கக்­கூ­டும் என்று எச்­சரிக்­கை­யும் விடுக்­கப்­பட்­டுள்­ளது. சில வாரங்­க­ளுக்கு முன்­பு­தான் பிரிட்­ட­னில் வர­லாறு காணாத அள­வில் வெப்­ப­நிலை அதி­க­மா­கப் பதி­வா­னது.

இந்நிலைக்குப் பரு­வ­நிலை மாற்­றம்­தான் முக்­கி­ய­மான கார­ணம் என்று பிரிஸ்­டல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் நீரி­யல் வல்­லு­ந­ரான டாக்­டர் கெம்மா கொக்­ஸொன் கூறி­னார்.