மொன்டனெக்ரோவில் துப்பாக்கித் தாக்குதல், 11 பேர் மரணம்

மொன்டனெக்ரோவில் துப்பாக்கித் தாக்குதல், 11 பேர் மரணம்

1 mins read
3f4c9079-631e-413b-818e-1197cc5ade85
-

ட்செட்­டினே (மொன்­ட­னெக்ரோ): மொன்­ட­னெக்­ரோ­வில் குடும்­பத் தக­றா­ரைத் தொடர்ந்து நடை­பெற்ற துப்­பாக்­கிச் சூட்­டுத் தாக்­கு­த­லில் குறைந்­தது 11 பேர் மாண்­ட­னர். சம்­ப­வம் அந்­நாட்­டின் ட்செட்டினே நக­ரில் நிகழ்ந்­தது.

துப்­பாக்கி ஏந்­திய ஆட­வர் ஒரு­வர் ஒரு குடும்­பத்­தைச் சேர்ந்த மூவ­ரைச் சுட்­டுக்­கொன்­ற­தா­க­வும் அதற்­குப் பிறகு அவர் வழிப்­போக்­கர்­க­ளைச் சுட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர். ஆட­வ­ரின் வீட்­டில் தங்­கி­யி­ருந்த ஒரு தாயும் அவ­ரின் இரண்­டு பிள்­ளை­களும் கொல்­லப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

தாக்­கு­தலை மேற்­கொண்ட 34 வயது ஆட­வர் பொது­மக்­களில் ஒரு­வ­ரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தைத் தொடர்ந்து தாக்­கு­தல் முடி­வுக்கு வந்­தது. குடும்பத்தில் மூவ­ரைச் சுட்­டுக் கொன்ற பிறகு தாக்­கு­தல்­கா­ரர் வீட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­னார். அதன் பின்­னர் அவர் தான் பயன்­ப­டுத்­திய அதே துப்­பாக்­கி­யைக் கொண்டு அப்­பகு­தி­யில் வசித்த ஏழு குடி­யி­ருப்­பாளர்­க­ளைச் சுட்­டுக் கொன்­றார்.