மணிலா: பிலிப்பீன்சின் தெற்குப் பகுதியில் உள்ள மொரோ கல்ஃப் வட்டாரத்தை நேற்று ரிக்டர் அளவில் 6.1 மதிப்புள்ள நிலநடுக்கம் உலுக்கியது.
கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கத்தால் அருகில் கொடபட்டோ, ஜெனெரல் சான்டோஸ், தாவோ, கிடபவான் போன்ற இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதாக பிலிப்பீன்ஸ் எரிமலை, நிலநடுக்கக் கல்விக் கழகம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேலும் சில அதிர்வுகள் உணரப்படலாம் என்று கழகம் கூறியது. ஆனால் அவற்றால் சேதம் ஏற்படும் அபாயம் அதிகம் இல்லை என்றும் அது குறிப்பிட்டது.

