ஷாங்காய்: கொவிட்-19 கட்டுப்பாடுகளால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள பள்ளிகள் அடுத்த மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மீண்டும் திறக்கப்படும். பாலர்பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
பள்ளியிலிருந்து கிளம்புவதற்கு முன்பு எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஷாங்காய் அரசாங்கத்தின் கல்வித் துறை தெரிவித்தது. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு 14 நாள்களுக்கு நகரில் இருந்தபடி தங்களின் உடல்நலனைக் கண்காணித்துக்கொள்ளுமாறும் கல்வித் துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
கொவிட்-19 கிருமிப் பரவலைச் சமாளிக்க கடந்த மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் ஷாங்காய் அதன் பள்ளிகளை மூடியது. பள்ளிக்குப் போக சில தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதம் அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், பெரும்பாலோர் தொடர்ந்து வீட்டிலிருந்துதான் பாடங்களை மேற்கொண்டனர்.
இப்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது ஷாங்காய் குடியிருப்பாளர்களுக்கு நற்செய்தியாக வந்துள்ளது. எனினும், கிருமிப் பரவலைக் கையாள முடக்கநிலை எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற அச்சம் அவர்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.
கொவிட்-19 கிருமிப் பரவலை முழுமையாக அழிக்கும் அணுகுமுறையை சீனா இன்னமும் பின்பற்றி வருகிறது

