$80 பி. அதிவேக ரயில் சேவை: வியட்நாம் ஆலோசனை

$80 பி. அதிவேக ரயில் சேவை: வியட்நாம் ஆலோசனை

1 mins read
f292c800-64f7-4b69-be24-98aa6405373b
-

ஹனோய்: வியட்­நா­மிற்­குள் 80.5 பில்­லி­யன் சிங்­கப்­பூர் வெள்ளி மதிப்­புள்ள அதி­வேக ரயில் சேவையை அமைப்­பது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­வ­தாக அந்­நாட்டு அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

1,545 கிலோ­மீட்­டர் நீளம்­கொண்ட ரயில் சேவையை அமைப்­ப­தற்­கான பரிந்­து­ரைத் திட்­டத்தை அடுத்த மாதம் பொலிட்­புரோ பிரி­வி­டம் வியட்­நா­மின் போக்­கு­வ­ரத்து அமைச்சு சமர்ப்­பிக்­கும் என்று அந்­நாட்டு அர­சாங்­கம் வெளி­யிட்ட செய்தி அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது. பொலிட்­புரோ, வியட்­நா­மின் ஆளும் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் முடி­வெ­டுக்­கும் பிரிவு.

வேக­மாக வளர்ந்­து­வ­ரும் தனது பொரு­ளி­ய­லுக்கு ஆத­ரவு வழங்க வட்­டார அள­வில் உற்­பத்தி மைய­மாக விளங்­கும் வியட்­நாம் தனது போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்த அதி­கம் செலவு செய்து வரு­கிறது.

அதி­வேக ரயில் சேவை­யின் 665 கிலோ­மீட்­டர் நீளம்­கொண்ட முதல் இரு பாதை­கள் 2032ஆம் ஆண்­டுக்­குள் செயல்­ப­டத் தொடங்­கும் என்­றும் 2045ஆம் ஆண்­டி­லி­ருந்து 2050ஆம் ஆண்­டுக்­குள் திட்­டம் முழு­மை­யா­கக் நிறை­வு­றும் என்­றும் அர­சாங்­கம் தெரி­வித்­தது.