ஐரோப்பாவில் வரலாறு காணாத அளவில் காட்டுத்தீ

ஐரோப்பாவில் வரலாறு காணாத அளவில் காட்டுத்தீ

1 mins read
74d13992-0419-415c-9cb5-bbbc6c0efacf
போர்ச்சுகலின் குவார்டெ பகுதியில் மூண்ட காட்டுத்தீயை அணைக்க முயலும் தீயணைப்பாளர்கள். படம்: இபிஏ -

பாரிஸ்: ஐரோப்­பா­வில் இவ்­வாண்டு வர­லாறு காணாத அள­வில் பல பகு­தி­கள் காட்­டுத்­தீ­யால் அழிந்­து­போ­ன­தாக ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் துணைக்­கோள் கண்­கா­ணிப்­புப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. இவ்­வாண்டு ஜன­வரி மாதம் முதல் சுமார் 600,000 ஹெக்­டர் பரப்­ப­ள­வைக் கொண்ட நிலம் தீயால் அழிந்­துள்­ள­தென அது கூறி­யது.

ஐரோப்­பா­வில் பொது­வாக மெடி­டெ­ர­னி­யன் வட்­டா­ரத்­தில் உள்ள நாடு­கள்­தான் காட்­டுத்­தீயை எதிர்நோக்கும். இவ்­வாண்டோ ஐரோப்பாவின் இதர சில நாடு­க­ளி­லும் இப்­பி­ரச்­சினை எழுந்­துள்­ளது. ஆஸ்­தி­ரியா, பிரான்ஸ், கிரீஸ், போர்ச்­சு­கல் உள்­ளிட்ட நாடு­களில் மூண்ட காட்­டுத்­தீ­யால் பலர் வீடு­க­ளை­விட்டு வெளி­யேற நேரிட்­டது.

பல ஐரோப்பிய நாடுகள் இவ்வாண்டு மோசமான அனல் காற்றை எதிர்நோக்கி வருகின்றன. குளிர் நாடுகளாகக் கருதப்படும் பிரிட்டன் போன்றவையும் அனல் காற்றால் அவதிப்படுகின்றன.