இலங்கையில் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம்

இலங்கையில் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம்

1 mins read
c5a15410-1774-4930-9ca4-d326443f51fb
-
Google News Preferred Icon

இலங்கையில் முன்னதாக தடை விதிக்கப்பட்ட தமிழ் அமைப்புகளில் ஆறு அமைப்புகளின் தடை நீக்கப்பட்டுள்ளது. உலக தமிழர் பேரவை, ஆஸ்திரேலிய தமிழர் காங்கிரஸ், பிரிட்டி‌ஷ் தமிழர் பேரவை, கனடியா தமிழர் காங்கிரஸ், உலக தமிழர் ஒருங்கிணைப்பு அமைப்பு, தமிழ் ஈழம் மக்கள் சங்கம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வு கழகம் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

இதோடு முன்னதாக தடை விதிக்கப்பட்ட 577 தனிநபர்களில், 317 பேர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனுக்கு விதிக்கப்பட்ட தடை விலகப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் 55 தனிநபர்களுக்கும் மேலும் மூன்று அமைப்புகளுக்கும் தடை விதித்துள்ளது.

தனிநபர்களுக்கும், அமைப்புகளுக்கும் விதிக்கப்படும் தடை ஆண்டுதோறும் மறுஆய்வு செய்யப்படுகிறது என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இது முழுக்கமுழுக்க சட்ட அமலாக்க அதிகாரிகளை சம்பந்தப்பட்டது என்றும், அரசியல்வாதிகளுக்கு இதில் பங்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத செயல்களுக்கு நிதி அளித்த என்று நம்பப்படும் அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக தடை விதிக்கப்படுகிறது.