'நஜிப்பும் ஸாஹிட்டும் புகாரைப் புறக்கணித்தனர்'

'நஜிப்பும் ஸாஹிட்டும் புகாரைப் புறக்கணித்தனர்'

3 mins read
56db9997-a87e-475d-a522-d85fb073209c
ஒப்பந்தம் தொடர்பாக கடற்படையின் கருத்துகள் செவிசாய்க்கப்படாதது ஏமாற்றம் அளித்ததாக முன்னாள் தலைமை அட்மிரல் அப்துல் அசிஸ் கூறினார். படம்: தி ஸ்டார் -

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சியக் கடற்­ப­டை­யில் கிட்­டத்­தட்ட 40 ஆண்­டு­கள் சேவை­யாற்றி ஓய்­வு­பெற இருந்­த­போது அதன் தலைமை அட்­மி­ர­லாக பதவி வகித்த அப்­துல் அசிஸ் ஜாஃப­ருக்கு பௌஸ்­டெட் ஹெவி இண்­டஸ்ட்­ரிஸ் நிறு­வ­னத்­தின் நிர்­வாக துணைத் தலை­வர் பதவி வழங்­கப்­பட்­டது.

அந்­தப் பத­வியை அவர் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தால் தலைமை அட்­மி­ரல் பத­வி­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற பிறகு, அவ­ருக்கு மாதந்­தோ­றும் 80,000 ரிங்­கிட் ($24,800) சம்­ப­ளத்­து­டன் வேறு பல சலு­கை­களும் கிடைத்­தி­ருக்­கும்.

ஆனால் கடற்­ப­டை­யில் உயர் பதவி வகித்து பல­ரால் மதிக்­கப்­படும் திரு அப்­துல் அசிஸ் புதிய பத­வியை ஏற்க மறுத்­தார்.

பௌஸ்­டெட் ஹெவி இண்­டஸ்ட்­ரிஸ் நிறு­வ­னத்­தின் ஒரு பிரி­வான பௌஸ்­டெட் கடற்­படை பட்­டறை மேற்­கொண்ட பல நட­வ­டிக்­கை­கள் மலே­சியக் கடற்­ப­டை­யின் நலன்­

க­ளுக்கு எதி­ரா­ன­தாக இருந்­த­தால் வழங்­கப்­பட்ட பத­வி­யைத் தாம் ஏற்­க­வில்லை என்­றார் 66 வயது திரு அப்­துல் அசிஸ்.

"அப்­போது திரு அக­மது ராம்லி முகம்­மது நூர் அப்­ப­த­வியை வகித்­தார். ஆனால் அந்த நிறு­வ­னத்­தின் புதிய நிர்­வா­கத் துணைத் தலை­

வ­ரா­கப் பதவி ஏற்­கப்­போ­வ­தில்லை என்று நான் முடி­வெ­டுத்­தேன்," என்று மலே­சிய பொதுக் கணக்­

கி­யல் குழு­வி­டம் திரு அப்­துல் அசிஸ் சாட்­சி­யம் அளித்­தார்.

விசா­ரணை மூலம் கிடைக்­கும் விவ­ரங்­களை மலே­சியப் பொதுக் கணக்­கி­யல் குழு, அந்­நாட்டு நாடாளு­மன்­றத்­தி­டம் சமர்ப்­பிக்­கும்.

திரு அக­மது ராம்லி, மலே­சி­யா­வின் முன்­னாள் கடற்­ப­டைத் தலை­வ­ரா­வார். மலே­சி­யா­வில் தற்­போது பெரி­தும் பேசப்­படும் ஒன்­பது பில்­லி­யன் ரிங்­கிட் ($2.8 பில்­லி­யன்) பெறு­மா­ன­முள்ள கட­லோரப் போர்க்கப்­பல் மோச­டி­யில் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று சந்­தே­கிக்­கப்­படும் இரு­வ­ரில் திரு அக­மது

ராம்­லி­யும் ஒரு­வர். மற்­றொ­ரு­வர் முன்­னாள் கடற்­படை கேப்­ட­னான அன்­வார் முராட். இவர் பௌஸ்­டெட் கடற்­படை பட்­ட­றை­யின் கட­லோரப் போர்க்கப்­பல் பிரி­வுத் திட்­டத்­தின் இயக்­கு­ந­ராக இருந்­தார்.

ஆறு கட­லோ­ரப் போர்க்கப்­பல்­

க­ளைக் கட்ட மலே­சிய அர­சாங்­கம் ஆறு பில்­லி­யன் ரிங்­கிட் செலுத்­தியதா­க­வும் ஆனால் அவற்­றில் ஒரு கப்­பல்­கூட மலே­சியா

வந்­த­டை­ய­வில்லை என்­றும் இம்­மா­தம் 4ஆம் தேதி­யன்று பொதுக் கணக்­கி­யல் குழு தெரி­வித்­ததை அடுத்து, இந்த மோசடி வெளிச்­சத்­துக்கு வந்­தது.

அந்த ஆறு கட­லோ­ரப் போர்க் கப்­பல்­க­ளைக் கட்ட 2011ஆம் ஆண்­டில் முறை­யான ஏலக்­குத்­தகை நடத்­தப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. அவற்­றைக் கட்­டு ­வ­தற்­கான ஒப்­பந்­தம் பௌஸ்­டெட் கடற்­படை பட்­ட­றைக்கு வழங்­கப்­பட்­டது. ஒப்­பந்­தப்­படி, முதல் போர்க் கப்­பலை மலே­சி­யா­வுக்கு 2019ஆம் ஆண்­டில் விநி­யோ­கம் செய்­தி­ருக்க வேண்­டும். ஆறா­வது கப்­பலை அடுத்த ஆண்டு விநி­யோ­கிக்க வேண்­டும். ஆனால் இது­வரை மலே­சி­யா­வுக்கு ஒரு கப்­ப­லைக்­கூட அந்நிறுவனம் அனுப்­பி­வைக்­க­வில்லை. ஒப்­பந்­தப்­படி கட­லோ­ரப் போர்க்கப்­பல்­கள் மலே­சி­யாவை வந்­த­டை­ய­வில்லை என்று அப்­போது பிர­த­ம­ராக இருந்த நஜிப் ரசாக்­கிற்­கும் அப்­போ­தைய தற்­காப்பு அமைச்­சர் ஸாஹிட் ஹமி­டிக்­கும் அர­சாங்­கத்­தின் தலை­மைச் செய­லா­ள­ருக்­கும், தற்­காப்பு, நிதி அமைச்­சு­க­ளின் தலை­மைச் செய­லா­ளர்­க­ளுக்­கும் தாம் பல கடி­தங்­கள் எழு­தி­ய­தாக ஓய்­வு­பெற்ற தலைமை அட்­மி­ரல் அப்­துல் அசிஸ் தெரி­வித்­தார். ஆனால் யாரி­ட­மி­ருந்­தும் பதில் வர­வில்லை என்­றார் அவர். கட­லோ­ரப் போர்க்கப்­ப­லின் வடி­வ­மைப்பு குறித்து கடற்­ப­டை­யின் கருத்­து­களை ஒப்­பந்­த­தா­ரர் செவி­சாய்க்­க­வில்லை என்று திரு அப்­துல் அசிஸ் அதி­ருப்தி தெரி­வித்­தார்.

தொடக்­கத்­தி­லி­ருந்து அனைத்­தும் பௌஸ்­டெட் கடற்­படை

பட்­ட­றைக்குச் சாத­க­மாக அமைந்­த­தாக அவர் குறை­கூ­றி­னார்.

கடற்­படை முன்­வைத்த கோரிக்­கை­க­ளை­யும் திரு ஸாஹிட் புறக்­

க­ணித்­தது தமக்குப் பெரும்

ஏமாற்­றத்­தைத் தந்­த­தாக திரு அப்்துல் அசிஸ் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, பௌஸ்­டெட் கடற்­படை பட்­ட­றை­யின் முன்­னாள் உயர் அதி­காரி மீது இன்று

கோலா­லம்­பூர் நீதி­மன்­றத்­தில்

குற்­றம் சுமத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கு தொடர்­பான விசா­ர­ணையை விரை­வுப்­ப­டுத்­தும்­படி மலே­சிய ஊழல் தடுப்பு ஆணை­யத்­துக்கு மலே­சி­யப் பிர­த­மர்

இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்

அண்­மை­யில் உத்­த­ர­விட்­டார்.

ஆதா­ரம் கிடைத்­தால் உட­ன­டி­யாக குற்­றச்­சாட்­டைப் பதிவு செய்து சம்­பந்­தப்­பட்­டோரை நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.