விளையாட்டுச் செய்திகள்

ஸ்பர்ஸ்-செல்சி சமநிலை; டுக்கல், கோண்ட்டேவுக்குச் சிவப்பு அட்டை

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் செல்சியும் ஸ்பர்சும் தரப்புக்கு இரண்டு கோல்களைப் போட்டு சமநிலை கண்டன.

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் திடலில் மட்டுமல்ல, அதற்கு வெளியிலும் அனல் பறந்தது.

ஆட்டம் முடிந்ததும், இரு நிர்வாகிகளும் கைகுலுக்கிக்கொள்வது வழக்கம். ஆனால் செல்சியின் நிர்வாகி தாமஸ் டுக்கலும் ஸ்பர்சின் நிர்வாகி அண்டோனியோ கோண்ட்டேவும் ஒரு படி மேல் சென்று ஒருவர் மற்றொருவர் கைகளைப் பற்றிக்கொண்டு விடாமல் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

சொந்த அரங்கில் வெற்றியுடன் தொடங்கிய நோட்டிங்ஹம் ஃபாரஸ்ட்

நோட்டிங்ஹம்: பல ஆண்டுகள் கழித்து, இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக்குத் திரும்பி இருக்கும் நோட்டிங்ஹம் ஃபாரஸ்ட், நேற்று முன்தின ஆட்டத்தில் சொந்த விளையாட்டரங்கத்தில் வெற்றி பெற்று நல்லதொரு தொடக்கத்தைப் பெற்றுள்ளது.

வெஸ்ட் ஹேம் குழுவுக்கு எதிரான ஆட்டத்தை ஃபாரஸ்ட் 1-0 எனும் கோல் கணக்கில் கைப்பற்றியது. ஃபாரஸ்ட்டின் வெற்றி கோலை டைவோ அவோனியி போட்டார்.

வெஸ்ட் ஹேமுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் ஃபாரஸ்ட் குழுவின் கோல்காப்பாளர் டீன் ஹெண்டர்சன் முறியடித்தார்.

அதுமட்டுமல்லாது, ஆட்டத்தின் முற்பாதியில் வெஸ்ட் ஹேம் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. ஆனால் அது சர்ச்சைக்குரிய வகையில் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் வெஸ்ட் ஹேமுக்கு அதிர்ஷ்ட தேவதையும் கைகொடுக்கவில்லை. அதன் இரு கோல் முயற்சிகள் நூலிழையில் இலக்கைத் தவறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!