கோலாலம்பூர்: 1எம்டிபி மோசடி வழக்கு தொடர்பாகப் புதிய
ஆதாரம் ஒன்றைக் கூட்டரசு நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையைத் தள்ளுபடி செய்யும் நோக்கில் மீண்டும் வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் விண்ணப்பம் செய்துள்ளார். அதற்கான இறுதி மேல்முறையீடு தற்போது நடைபெற்று வருகிறது.
1எம்டிபி நிதியிலிருந்து 4.5 பில்லியன் அமெரிக்க டாலரை ($6.19 பில்லியன்) நஜிப் கையாடியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தம்மீது சுமத்தப்பட்ட
மோசடிக் குற்றச்சாட்டுகளை நஜிப் மறுத்து வருகிறார்.
இறுதி மேல்முறையீடு
இம்மாதம் 26ஆம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்
பட்டது. நஜிப்பின் மேல்முறையீட்டை நீதிமன்றம் ஏற்க மறுத்தால், அவர் உடனடியாக சிறைத் தண்டனையைத் தொடங்க வேண்டிவரும் என நம்பப்படுகிறது.
நீதிமன்றத்தில் நஜிப் ரசாக்.
படம்: இபிஏ

