துப்பாக்கியால் சுட்டவர் உயிரை மாய்த்துக்கொண்டார்

துப்பாக்கியால் சுட்டவர் உயிரை மாய்த்துக்கொண்டார்

1 mins read
32fa1676-7c2c-4e5f-8548-d789cb36f645
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­துக்கு அரு­கில் வைக்­கப்­பட்­டி­ருந்த தடுப்­பு­கள் மீது காரை மோதி, பிறகு வானத்தை நோக்கி துப்­பாக்­கி­யால் சுட்ட ஆட­வர், கடை­சி­யில் அதே துப்­பாக்­கி­யைக் கொண்ட தமது உயிரை மாய்த்­துக்­கொண்­டார்.

அந்த ஆட­வர் காரை­விட்டு வெளி­யே­றி­ய­போது அது தீப்­

பி­டித்­துக்­கொண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­தது.

அமெ­ரிக்­கா­வின் முன்­னாள் அதி­பர் டோனல்ட் டிரம்­புக்­குச் சொந்­த­மான உல்­லாச விடு­தி­யில் இருந்த ரக­சிய ஆவ­ணங்­களை அமெ­ரிக்க கூட்­ட­ரசு புல­னாய்­வுப் பிரி­வி­னர் பறி­மு­தல் செய்­ததை அடுத்து, இந்­தச் சம­ப­வம் நிகழ்ந்­தி­ருப்­பது கூடு­தல் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.