சூச்சிக்குக் கூடுதலாக ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை

சூச்சிக்குக் கூடுதலாக ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை

1 mins read
6696368e-04f9-499e-ba07-a19397efceb6
-

யங்­கூன்: மியன்­மா­ரின் முன்­னாள் தலை­வர் ஆங் சான் சூச்­சிக்­குக் கூடு­த­லாக ஆறு ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

77 வயது திரு­வாட்டி சூச்­சிக்கு எதி­ரான இந்­தத் தீர்ப்பு அவ­ரது ஆத­ர­வா­ளர்­களை மேலும் கோபப்­ப­டுத்­தும் என்­றும் இதன் கார­ண­மாக வன்­முறை வெடிக்­கக்­கூ­டும் என்­றும் அஞ்­சப்­ப­டு­கிறது.

காலஞ்­சென்ற தமது தாயா­ரின் பெய­ரில் தொடங்­கப்­பட்ட அற­நி­று­வ­னத்­தைப் பயன்­

ப­டுத்தி, திரு­வாட்டி சூச்சி ஊழல் புரிந்­த­தாக தலை­ந­கர் நேப்­பி­டோ­வில் உள்ள சிறைக்­குள் அமைக்­கப்­பட்ட சிறப்பு நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சூச்­சிக்கு விதிக்­கப்­பட்ட கூடு­தல் தண்­டனை பொது­மக்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்படுகிறது.

இந்­நி­லை­யில், திரு­வாட்டி சூச்­சிக்கு விதிக்­கப்­பட்ட கூடு­தல் தண்­டனை குறித்து நன்கு அறிந்த சிலர் இத்­த­க­வலை வெளி­யிட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவர்­கள் தங்­கள் பெயர்­க­ளைத் தெரி­விக்க விரும்­ப­வில்லை என்றும் அறி­யப்­

ப­டு­கிறது. கடந்த ஆண்டு மியன்­மார் ராணு­வம் ஆட்­சி­யைப் பிடித்­த­தி­லி­ருந்து திரு­வாட்டி சூச்­சிக்கு எதி­ராக நான்கு முறை தீர்ப்­

ப­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

இதன்­மூ­லம் அவ­ருக்கு மொத்­தம் 17 ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­

பட்­டுள்­ளது.

எனவே, ராணு­வத்­தின் பிடி­யில் மியன்­மார் இருக்­கும் வரை திரு­வாட்டி சூச்சி சுதந்­திரக் காற்றை சுவா­சிக்க முடி­யாது என்று அர­சி­யல் விமர்­ச­கர்­கள் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.