இலங்கையை சென்றடைந்தது சீனக் கப்பல்; இந்தியா, அமெரிக்கா அக்கறை

இலங்கையை சென்றடைந்தது சீனக் கப்பல்; இந்தியா, அமெரிக்கா அக்கறை

1 mins read
38b74bde-7fd0-4b20-871d-e429ce61e9da
-
multi-img1 of 2

சீனா­வின் ஆய்­வுக் கப்­பல் ஒன்று இலங்­கை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. இந்த கப்பல் குறித்து இந்தியா, அமெரிக்கா ஆகியவை அக்கறை வெளிப்படுத்தி வந்துள்ளன. இந்த நிலை­யில் யுவான் வாங்-5 எனும் ஆய்­வுக் கப்­பல் ஹம்­பன்­தோட்­டாவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கப்பல் எந்தவொரு ஆராய்ச்சியிலும் ஈடுபடாது என்ற நிபந்தனை உள்பட அது இலங்கைக்கு வர அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரிகள் கூறினர்.

கப்பல் முன்னதாக சென்ற வாரம் இலங்கையை சென்றடைவதாக இருந்தது. ஆனால் இந்த விவகாரம் குறித்து இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இலங்கை அரசாங்கம் கப்பல் பயணத்தை ஒத்திவைக்குமாறு சீனாவை கேட்டுக்கொண்டது. சென்ற வாரம் கப்பல் ஹம்­பன்­தோட்­டா துறைமுகத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று இலங்கை அரசாங்கம் முடிவெடுத்தது.

யுவான் வாங்-5 எனும் இந்த கப்பல் ஆராய்ச்சி, ஆய்வு மேற்கொள்ள பயன்படுத்தப்படுவதாக கப்பல் போக்குவரத்து நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், இது உளவுக் கப்பல் என்று இந்திய ஊடகங்கள் கூறிவருகின்றன.

இந்திய பெருங்கடல், இலங்கை ஆகியவற்றில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்திய அரசாங்கம் பலமுறை அக்கறை தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. அதாவது ஹம்­பன்­தோட்­டா துறைமுகத்தில் இருந்தபடியே, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் எறிவிசை ஏவுகணை சோதனைகளை இந்த கப்பல் உளவு பார்க்கும் முடியும் என்று இந்தியா நம்புகிறது.