நியூசிலாந்தில் ஏலாத்தில் வாங்கிய கைப்பெட்டிகளில் மனித உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து காவல் துறையின் விசாரணை தொடங்கியுள்ளது. பெட்டிகளில் ஒருவருக்கும் அதிகமான உறுப்புகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உறுப்புகளை அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.
பெட்டிகளை வாங்கியவர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டது.
பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், சடலங்களை கண்டறிவது தற்போது முக்கிய பணியாக இருப்பதாகவும் காவல் துறையினர் குறிப்பிட்டனர்.

