தோக்கியோ: அமெரிக்காவுடன் தென்கொரியாவும் ஜப்பானும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவாய் பகுதியில் நடந்த இந்தப் பயிற்சியில் ஏவுகணை எதிர்ப்புப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
வடகொரியா, சீனா ஆகிய நாடுகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட தயாராக உள்ளதை, இது காட்டுவதாகக் கருதப்படுகிறது.
ஆகஸ்ட் 8 முதல் 14ஆம் தேதி வரை இப்பயிற்சி நடந்ததாக அமெரிக்க தற்காப்புத் துறையின் அறிக்கை கூறுகிறது.
சென்ற ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற அமைச்சுகளுக்கு இடையிலான சந்திப்பின் போது, இந்தப் பயிற்சியை மேற்கொள்ள மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்ட தாகவும் அந்த அறிக்கை சொன்னது.
ஜப்பான், தென்கொரியாவுடனான உறவை வலுப்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறது அமெரிக்கா.
2017ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் அணுவாயுத சோதனையை நடத்த வடகொரியா தயாராகி வருவதாகவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

