911 அவசர சேவை எண்ணுக்கு அழைத்த குரங்கு

911 அவசர சேவை எண்ணுக்கு அழைத்த குரங்கு

1 mins read
63d63419-6718-4df6-8ccc-44e6c4bf68ac
911க்கு அழைத்த ரூட் என்று பெயரிடப்பட்ட குரங்கு. படம்: சான் லூயிஸ் ஒபிஸ்போ நகர காவல்துறை அலுவலகம் -

அமெரிக்காவில் அவசர சேவைக்கான 911 தொலைபேசி எண்ணுக்கு குரங்கொன்று அழைத்திருக்கிறது.

அழைப்பு வந்தவுடன் லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு 320 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'ஸூ டு யூ' விலங்குத் தோட்டம் ஒன்றுக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.

அங்கு சென்று பார்த்தால் மனிதர்கள் யாருக்கும் பிரச்சினை ஏதும் இல்லை.

சற்று ஆராய்ந்துபார்த்த பிறகு ஒரு குரங்குதான் இதற்குக் காரணம் என்பது தெரியவந்தது.