90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன விலங்கை உருவாக்கும் முயற்சி

90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன விலங்கை உருவாக்கும் முயற்சி

1 mins read
b2f9ab71-5bfd-4d9a-91cf-90ac7ecbcd9c
1930 அழிந்துபோன 'டாஸ்மேனியன் டைகர்' எனும் தைலசீன். கோப்புப் படம்: ஆஸ்திரேலிய தேசிய காப்பகம் 2015 -

ஆஸ்திரேலியாவின் 'டாஸ்மேனியன் டைகர்' என்றழைக்கப்படும் 1930களில் முழுமையாக அழிந்துபோன தைலசீன் எனும் விலங்கை மீண்டும் உயிருடன் கொண்டுவரும் முயற்சியில் ஆய்வாயர்கள் இறங்கியுள்ளனர்.

உயிருடன் இருந்த கடைசி தைலசின் 1930களில் மாண்டதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரபணுவை மாற்றும் தொழில்நுட்ப முறை உள்ளிட்டவற்றைக் கொண்டு 10 ஆண்டுகளில் தைலசீைனை மீண்டும் உருவாக்கி அதை வனப்பகுதக்குள் அனுப்ப ஆஸ்திரேலிய, அமெரிக்க ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பல மில்லியன் டாலர் செலவில் தைலசீனை மீண்டும் உயிருக்குக் கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இது சாத்தியமல்ல என்று சில வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.