சீனாவில் அனல் காற்றால் குறைவான முட்டைகளை இடும் கோழிகள்; விலை உயர்வு

சீனாவில் அனல் காற்றால் குறைவான முட்டைகளை இடும் கோழிகள்; விலை உயர்வு

1 mins read
33918056-1140-4965-9cb8-1f0f277fe7ca
பொறிக்கப்பட்ட கோழி முட்டைகள். படம்: ஏஎஃப்பி -

கிழக்கு சீனாவில் வீசும் அனல் காற்றால் கோழிகள் வழக்கத்தைவிட குறைவான எண்ணிக்கையில் முட்டைகளை இடுகின்றன.

அதனால் முட்டை விலை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் பல முக்கிய நகரங்களில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை பதிவாகி வருகிறது.

பருவநிலை மாற்றத்தால் உருவெடுத்துள்ள இந்நிலை மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளையும் பாதிக்கிறது.