கிரைமியா ராணுவத் தளத்தில் மீண்டும் வெடிப்புச் சம்பவங்கள்

கிரைமியா ராணுவத் தளத்தில் மீண்டும் வெடிப்புச் சம்பவங்கள்

1 mins read
daa67d2d-631c-43c6-b314-f92eb3d34784
வெடிப்புச் சம்பவங்களால், வடக்கு கிரைமியாவில் ரயில் சேவை தடைபட்டது. ரயில் பாதையில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

கியவ்: ர‌ஷ்­யா­வின் பிடி­யில் இருக்­கும் கிரை­மியா ராணு­வத் தளத்­தில் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று மீண்­டும் வெடிப்­பு­ச் சம்பவங்கள் நிகழ்ந்­தன. இந்த சதிச் செய­லுக்கு ர‌ஷ்யா கண்­ட­னம் தெரிவித்­துள்­ளது.

உக்­ரேன் மீதான படை­யெ­டுப்­பில், ர‌ஷ்­யா­விற்கு ஆயுத விநி­யோ­கம் செய்­வ­தில் இந்த ராணு­வத்­தளம் முக்­கி­யப் பங்கு வகிக்­கின்­றது.

ஆயு­தக் கிடங்­கில் நிகழ்ந்த இந்த வெடிப்­பில் இரண்­டா­வது துணை மின்­நி­லை­யம் தீப்­பி­டித்து எரிந்­த­தைக் காணொ­ளி­கள் காட்­டின.

இதனால், வடக்கு கிரை­மி­யா­வில் ரயில் போக்­கு­வ­ரத்து தடை­பட்­டது. அத்­து­டன் அரு­கில் உள்ள கிரா­மத்­தில் இருந்து கிட்­டத்­தட்ட 2,000 பேர் வெளி­யேற்­றப்­பட்­ட­தாக ர‌ஷ்ய அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

மத்­திய கிரை­மி­யா­வில் உள்ள இரண்­டா­வது ர‌ஷ்ய ராணு­வத் தளத்­தில் புகைமூட்­டம் காணப்­பட்­ட­தாக ர‌ஷ்ய நாளி­தழ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

முதல் வெடிப்பு, கிரை­மியா ராணுவத் தளத்­தின் மற்­றொரு பிரி­வில் சென்ற வாரம் நிகழ்ந்­தது.

இந்தத் தாக்குதல்கள், ர‌ஷ்­யக் கட்­டுப்­பாட்டு பகு­தி­களில் ஊடு­ருவி, தாக்­கு­தல் நடத்­தும் திறன் உக்­ரே­னிடம் இப்­போது இருப்பதைக் காட்டுவதாகக் கரு­தப்­ப­டு­கிறது.

முதல் வெடிப்­புச் சம்­ப­வங் களுக்குத் தங்­கள் தரப்­பில் நடந்த தவறே கார­ணம் என்று கூறிய ர‌ஷ்யா, இரண்­டா­வது வெடிப்­பைச் சதி செயல் என்­றும் அதற்கு உக்­ரேன்­தான் கார­ணம் என்றும் சாடியுள்ளது.

இந்த வெடிப்­பு­க­ளுக்கு உக்­ரேன் பொறுப்­பேற்­க­வில்லை என்­றா­லும் தான் கார­ணம் அல்ல என்று மறுக்­க­வும் இல்லை.

ஆனால், வெடிப்­பு­க­ளால் உக்­ரேன் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. பொதுமக்­கள் யாரும் கிரை­மி­யாவை ஒட்­டிய பகுதி­க­ளுக்­குச் செல்­ல­வேண்­டாம் என்று உக்­ரேன் எச்­ச­ரித்­துள்­ளது.