‘ஆறு கப்பல்களையும் கட்டி முடிக்க 11 பில்லியன் ரிங்கிட் செலவிட வேண்டியிருக்கும்’

கோலா­லம்­பூர்: மலேசியக் கடற்­படைக் கப்­பல்­க­ளைக் கட்டி முடிக்க அர­சாங்­கம் ஒட்­டு­மொத்­த­மாக 11.145 பில்­லி­யன் ரிங்­கிட் செல­விட வேண்டி இருக்­கும் என்று விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை கூறு­கிறது.

முன்பு இந்­தக் கப்­பல்­க­ளைக் கட்­டு­வ­தற்­காக ஒப்­புக்கொள்­ளப்­பட்­டி­ருந்த 9 பில்­லி­யன் ரிங்­கிட்­டை­விட குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­க­மா­கும்.

சர்ச்­சைக்­கு­ரிய போர்க்­கப்­பல் ஒப்­பந்த ஊழல் தொடர்­பான பிரச்­சி­னை­களை விசா­ரித்த அர­சாங்­கக் குழு­வின் அறிக்கை, நேற்று பொது அறிக்­கை­யாக வெளி­யிடப்­பட்­டது.

எல்­சி­எஸ் ஊழல் எனும் இந்த விவ­கா­ரம் பற்­றிய விசா­ர­ணைக் குழு­வின் கொள்­மு­தல், நிர்­வா­கம், நிதி அறிக்­கை­யின்­படி, முக்­கிய ஒப்­பந்­தக்­கா­ர­ரான பௌஸ்­டெட் நேவல் ‌ஷிப்­யார்ட் எனும் பிஎன்­எஸ் நிறு­வ­னம், 2019ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி எழு­தி­யி­ருந்த கடி­தத்­தில், ஆறு கப்­பல்­க­ளை­யும் முடிக்க கூடு­த­லாக 1.416 பில்­லி­யன் ரிங்­கிட் கோரி­யி­ருந்­தது.

ஒருங்கிணைந்த தளவாட ஆதரவு எனும் ஐஎல்எஸ் உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்காக பிஎன்எஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக 800 மில்லியன் ரிங்கிட் கொடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஐஎல்எஸ் உபகரணத்திற்கான செலவு, எல்சிஎஸ் ஒப்பந்தத்தின் விலையை 9.7286 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்தது.

முக்­கிய உப­க­ர­ணங்­க­ளின் பரி­மாற்­றம் கார­ண­மாக, ஆறு கப்பல்­களின் கட்­டு­மா­னச் செலவு மேலும் அதி­க­ரிக்­கும் என்று விசா­ர­ணைக் குழு எதிர்­பார்க்­கிறது. அது கால­தா­ம­தத்­திற்­கும் வழி­வ­குக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

ஆகஸ்ட் 2020ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய ஆறு கப்பல்களில் ஒன்றுகூட இதுவரை முடிக்கப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!