ஸ்பெயின், போர்ச்சுகலில் பெரும் காட்டுத்தீ; புகைமூட்டத்தால் திணறும் மக்கள்

ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ ஆகிய நாடுகளில் பேரளவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீச் சம்பவங்களை அணைப்பதற்குத் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மொராக்கோவில் மூன்று தீயணைப்பாளர்கள் மாண்டுவிட்டனர்; இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

மத்திய போர்ச்சுகலில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயால் விண்ணை முட்டும் அளவிற்குப் புகைமூட்டம் காணப்படுகிறது.இந்தப் புகைமூட்டம் 400 கி.மீ தொலைவில் உள்ள மட்ரிட் நகரில் உயர்ந்து நிற்கும் ‘நான்கு கோபுரங்கள்’ என்று அழைக்கப்படும் கட்டடத்தை மூடியது. மேலும் ஸ்பெயினில் புகைநெடி கடுமையாக இருப்பதாகவும் கூறினர். ஸ்பெயினில், கிட்டத்தட்ட 10,000 ஹெக்டர் அளவில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த 300 பேர் போராடி வருகின்றனர். (படத்தில்) ஸ்பெயினின் பெஜிஸ் பகுதியில் எரியும் காட்டுத்தீயை அணைப்பதற்காக ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. படம்: இபிஏ

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!