மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் வழக்கை ஒத்தி வைக்கும் முயற்சி தோல்வி - 1எம்டிபி மேல் முறையீடு தொடங்கியது

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் வழக்கை ஒத்தி வைக்கும் முயற்சி தோல்வி - 1எம்டிபி மேல் முறையீடு தொடங்கியது

2 mins read
bbe37a4d-db4b-4626-b170-9d083222c0ad
-

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்கின் இறுதி மேல் முறையீட்டு விசாரணையை ஒத்தி வைக்கும் முயற்சி தோல்வியில் முடிய அவரது 1எம்டிபி வழக்கின் இறுதி மேல் முறையீடு விசாரணை இன்று தொடங்கியது.

திரு நஜிப்பின் தற்காப்பு வழக்கறிஞர் திரு ஹிஷாம் தே போ தேக் இறுதி நேரத்தில் இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த வழக்கில் வாதிட தாம் இன்னும் தயாராகவில்லை என்ற காரணத்தை அவர் முன்வைத்தார்.

தலைமை நீதிபதி துங்கு மைமும் துவான் மாட் தலைமையிலான நீதிபதி குழு அந்த கோரிக்கையை நிராகரித்தது.

எனினும் தன் சார்பில் எந்த வாதத்தையும் திரு ஹ‌‌‌‌ஷாம் முன்வைக்கவில்லை. இதனால் இரண்டு மணி நேரம் நீதிமன்ற விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் திரு ‌ஹி‌‌‌ஷாமின் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டு வழக்கு ஒத்தி வைக்கப்படமாட்டாது என்று குழு அறிவித்தது.

தற்காப்புத் தரப்பு தமது வாதத்தை முன்வைக்க கால அவகாசம் கொடுக்க முதலில் அரசு தரப்பின் வாதத்தை நீதிபதி குழு முன்வைக்கச்சொன்னது.

நீதிபதிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட திரு ஹி‌‌‌ஷாம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதை நிராகரிக்க எடுத்த முடிவை மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

திரு. நஜிப் 200ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மலேசியப் பிரதமராக இருந்தார்.

2014, 2015ஆம் ஆண்டுகளில் 1எம்டிபியின் முன்னைய கிளைநிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நே‌‌ஷனல் நிறுவனத்திலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் திரு. நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதன் தொடர்பில் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.

அதன் தொடர்பில் அவருக்கு 12 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்து உயர்நீதிமன்றம் ஈராண்டுக்கு முன்னர் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராகத் திரு. நஜிப்பின் கடைசி மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெறுகிறது.