பத்து குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு விருதும் பணமும் வழங்கும் புட்டின்

பத்து குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு விருதும் பணமும் வழங்கும் புட்டின்

1 mins read
517150ed-bc2f-454b-b77f-d35cc59908d6
-

ர‌ஷ்யாவில் 10 அல்லது அதற்கும் மேலான குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு விருதும் ஒரு மில்லியன் ரூபில்ஸ்(S$22,700) பரிசுப்பணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட அந்த விருதை மீண்டும் வழங்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் முடிவு செய்துள்ளார்.

ரஷ்யாவில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு சோவியத் காலத்தில் வழங்கப்பட்ட கௌரவ விருதான 'மதர் ஹீரோயின்'(Mother Heroine) விருதை மீண்டும் அறிவித்துள்ளார் விளாடிமிர் புடின்.

2021 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவின் மக்கள்தொகை வீழ்ச்சி விகிதம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.