காபூல் தாக்குதலில் 21 பேர் மரணம்

காபூல் தாக்குதலில் 21 பேர் மரணம்

1 mins read
ab7b2a29-bebb-4f56-9d9a-362d3422ec12
-

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் நகர பள்ளிவாசலில் குண்டு வெடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர் என்று அந்நகர காவல்துறை நேற்று தெரிவித்தது. உயிர்ச்சேதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

புதன்கிழமை அன்று ஏராள மானோர் வழக்கமான தொழுகைக்காக கூடியிருந்தனர். அப்போது சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் பலர் உடல் சிதறி மாண்டனர். ஏறக்குறைய 33 பேர் காயம் அடைந்ததாக காவல்துறை பேச்சாளர் காடிலத் ஸட்ரன் கூறினார்.

பள்ளிவாசல் உள்ளேயே குண்டு வெடித்தது என்றார் அவர். இறந்தவர்களில் பள்ளிவாசலின் இமாமும் ஒருவர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.