ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் மியன்மார்

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் மியன்மார்

1 mins read
dc1cc708-9420-492a-b25e-1bdc094dd016
-

யங்­கூன்: மியன்­மா­ரின் ராணுவ அர­சாங்­கம், ரஷ்­யா­வி­ட­மி­ருந்து கச்சா எ;ண்ணெய், எரி­பொ­ருள் வாங்க திட்­ட­மிட்­டுள்­ளது. நாட்­டில் நில­வும் எரி­பொ­ருள் தட்­டுப்­பாட்­டுக்­குத் தீர்வு காண இம்­மு­டிவு எடுக்­கப்­பட்டு உள்­ள­தாக ராணுவ பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

உல­கம் முழு­வ­தும் எரி­பொ­ருள் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

இதில் மியன்­மா­ரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ரஷ்யா, உக்­ரேன் மீது படை யெடுத்­த­தற்­கா­க­வும் மியன்­மார், ஜன­நா­யக ஆட்­சி­யைக் கவிழ்த்த தற்­கா­க­வும் அவ்­விரு நாடு­கள் மீது ஐரோப்­பிய பல்­வேறு தடை­களை விதித்­துள்­ளது.

இந்த நிலை­யில் இவ்­வாண்டு இறு­தி­யில் ரஷ்­யா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் எரி பொருளை படிப்­ப­டி­யாக நிறுத்த ஐரோப்­பிய நாடு­கள் முடிவு செய்து உள்­ள­தால் புதிய வாடிக்­கை­யா­ளர்­களை ரஷ்யா தேடி வரு­கிறது.

இந்­தச் சூழ்­நி­லை­யில் "ரஷ்யா வில் இருந்து பெட்­ரோல் இறக்­கு­மதி செய்ய அனு­மதி தரப்­பட்டு உள்­ளது. ரஷ்­யப் பெட்­ரோ­லின் விலை, தரம் சாத­மாக உள்­ளது என்று," என்று ராணு­வப் பேச்­சா­ளர் கூறி­னார்.

இதற்­கி­டையே மியன்­மார் ராணுவ அர­சாங்­கத்­து­ட­னான உறவை இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் தற்­காத்­துப் பேசி­யுள்­ளார்.