வெலிங்டன்: ஆக்லாந்தில் ஏலம் விடப்பட்ட இரண்டு கைப்பெட்டிகளில் தொடக்கப்பள்ளி வயதுடைய இரு குழந்தைகளின் எஞ்சிய எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இரண்டு சடலங்களும் பல ஆண்டுகளாக பெட்டியில் இருந் திருக்கலாம் என்று நியூசிலாந்தின் துப்பறியும் ஆய்வாளர் டோஃபிலாவ் ஃபாமானுயா வாலுவா தெரிவித்தார். குழந்தைகளின் வயது ஐந்து முதல் பத்து வயது வரை இருக்க லாம் என நம்பப்படுகிறது.
ஒரே அளவுள்ள இரண்டு பெட்டி களில் குழந்தைகளின் சடலம் இருந்தது என்று அவர் கூறினார்.
இறந்த நேரத்துக்கும் கண்டு பிடிக்கப்பட்ட நேரத்துக்கும் இடை யே நீண்ட இடைவெளி இருப்பதால் விசாரணை சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மொத்தமாக விற்கப்பட்ட பொருட்களை சேமிப்புக் கிடங்கிலிருந்து லாரியில் ஏற்றிச்சென்ற குடும்பத்தினர் கைபெட்டிகளில் சடலங்கள் இருந்ததைக் கண்டு பிடித்தனர். "இதற்கும் அந்தக் குடும்பத்துக்கும் தொடர்பு இல்லை. ஆனால் பெட்டிகளில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த குடும்பம் துயரம் அடைந்துள்ளது. கைப்பெட்டிகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட இதர வீட்டு உபயோகப்பொருட்கள் குழந் தைகளை அடையாளம் காண உதவும்," என்றார் அவர். இந்த நிலையில் சேமிப்புக் கிடங்கு மற்றும் அங்கிருந்த பொருட்களை தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். 'இண்டர்போல்' அமைப்புடன் சேர்ந்து நியூசிலாந்து காவல்துறை இந்தச் சம்பவத்தை விசாரித்து வருகிறது.

