விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

1 mins read
04efc6b2-c320-4b50-92c1-f983a7ac0985
-

பாலஸ்டியர் கல்சா அணி

பயிற்றுவிப்பாளர் புறப்படுகிறார்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரிமியர் லீகில் பாலஸ்டியர் கல்சா ஆகப்பெரிய வெற்றியை பதிவு செய்த ஒரு வாரத்திற்கு உள்ளாகவே அதன் தலைமை பயிற்றுவிப்பாளர் அக்பர் நவாஸ் இம்மாத இறுதியில் பதவி விலகுகிறார்.

எட்டு அணிகளைக் கொண்ட சிங்கப்பூர் லீகில் 2வது கடைசி இடத்தில் பாலஸ்டியர் அணி இடம்பிடித்தது.

பதவி விலகிய 46 வயது அக்பரிடம் பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிக்கையில் பாலஸ்டியர் தெரி வித்தது. 2வது நிலையில் உள்ள உடோன் தானி எனும் தாய் அணியில் அவர் சேர்கிறார் என்றும் அறிக்கை சொன்னது.

ஆரம்பத்தில் அந்த அணியின் தொழில்நுட்ப இயக்கு நராகவும் அதே சமயத்தில் முதல் நிலை அணிக்கு உதவி பயிற்றுவிப்பாளராகவும் அக்பர் பணியாற்றுவார் என அறியப்படுகிறது.

சின்சினாட்டியில் நடால் தோல்வி

சின்சினாட்டி: டென்னிஸ் வீரர் ரஃபயல் நடால் காயத்திலிருந்து தேறி ஆடிய முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளார். சின்சினாட்டி பொது விருதுப் போட்டியில் போர்னா கோரிக்குடம் அவர் வெற்றியை நழுவவிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய நடால், "நான் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை, அதிக பயிற்சி தேவைப்படுகிறது. என்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்," என்று கூறினார். காயம் ஏற்பட்டதால் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிச் சுற்றிலிருந்து அவர் வெளியேறினார். இதனால் அமெரிக்க பொதுவிருதுப் போட்டியிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் என சொல்லப்பட்டது. ஆனால் அமெரிக்க பொதுவிருது போட்டிக்கு தயாராக போவதாக நடால் அறிவித்துள்ளார்.