தேசிய பாதுகாப்பு வழக்கு; தகவலை வெளியிட அனுமதி

தேசிய பாதுகாப்பு வழக்கு; தகவலை வெளியிட அனுமதி

1 mins read
5d5bba8e-5c45-42af-84f2-84b7ebc34f5f
-

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் 47 ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­கள் தொடர்­பான தேசிய பாது­காப்பு வழக்­கில் விசா­ரணை தொடர்­பான தக­வல்­களை வெளி­யிட அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது.

ஒரு வரு­டத்­திற்கு மேலாக இந்த வழக்கு நிலு­வை­யில் இருந்து வரு­கிறது. இந்த நிலை­யில் விசா­ர­ணைக்கு முந்­திய கலந்­து­ரை­யா­டலை வெளி­யிட விதிக்­கப்­பட்ட தடை அகற்­றப்­பட்­டுள்­ளது. 2021ஆம் ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் விடி­ய­வி­டிய நக­ரம் முழு­வ­தும் நடத்­தப்­பட்ட சோத­னை­யில் 47 ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அரசு தரப்பு வழக்­க­றி­ஞர்­கள், விசா­ர­ணைக்கு தயா­ராக அதிக நேரம் தேவை என்று அடிக்­கடி கேட்­டுக்­கொண்­ட­தால் வழக்கு பல­முறை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. இது­வரை 13 பேர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.