உலகளவில் கொவிட்-19 பரவல் 24% குறைவு: உலக சுகாதார அமைப்பு

உலகளவில் கொவிட்-19 பரவல் 24% குறைவு: உலக சுகாதார அமைப்பு

1 mins read
219dcf78-d204-4acc-8827-3ff4f7a71b8a
-

வாஷிங்டன்: உலகில் எல்லா இடங்களிலும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் கொவிட்-19 தொற்று பரவல் 24% குறைந்துள்ளது என அமைப்பு குறிப்பிட்டடது.

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது இதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதனால் கொரோனா விதிமுறைகளை மறந்து பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர்.

கொரோனாவுடன் வாழ பழகி விட்டனர். கடந்த வாரம் 54 லட்சம் பேரை கொரோனா தாக்கி உள்ளது. இது அதற்கு முந்தையை வாரத்தை விட 24 சதவீதம் குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 40 சதவீதமும் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இறப்புகளும் குறைய ஆரம்பித்து இருக்கிறது. ஆனாலும் ஆசியாவில் ஒரு சில பகுதிகளில் இன்னும் மரண எண்ணிக்கை சற்று அதிகமாகதான் உள்ளது.