அமெரிக்காவில் குடியேற திட்டமிடும் கோத்தபாய ராஜபக்சே

அமெரிக்காவில் குடியேற திட்டமிடும் கோத்தபாய ராஜபக்சே

1 mins read
78f6a299-bc6c-471a-927f-c61d60015671
சிங்கப்பூருக்கு வரவில்லை இலங்கை அதிபர் கோதபாய. படம்: கோதபாய ராஜபக்சே ஃபேஸ்புக் -

அடுத்த வாரம் இலங்கைக்குத் திரும்பவிருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் காத்தபாய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியதை தொடர்ந்து ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபாய ராஜபச்சே மனைவியுடன் முதலில் மாலத்தீவு சென்றார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு வந்த அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்து உள்ளார்.

அவர் விரைவில் தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்ப இருப்பதாக அவரது உறவினர் உதயங்க வீர துங்கா தெரிவித்தார்.

இதனால் வரும் 24ஆம்தேதி அவர் சொந்தநாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை மக்கள் இன்னும் அவர் மேல் கோபமாக உள்ளதால் மீண்டும் இலங்கை வந்தால் பாதுகாப்பு இருக்காது என அவர் நினைக்கிறார். இதையடுத்து அவர் தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார்.

இதற்காக அவர் 'கிரீன்கார்டு' கேட்டு விண்ணப்பித்து உள்ளார். கடந்த மாதமே தனது வக்கீல் மூலம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற்றம் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான புதிய மசோதா விதிகளின் படி கிரீன்கார்டு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.