படைகளைத் திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை கிடையாது- உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி

உக்ரேன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக அவர் உக்ரேன் சென்றுள்ளார்.

அவருடன் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசும், உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேற்று சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

போர்க் கைதிகளின் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவது பற்றியும், உக்ரேன் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பிற்கு, ஐ.நா.வின் அணுசக்தி நிபுணர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

இந்த விவகாரத்தில் துருக்கி மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருப்பதாக எர்டோகன் மீண்டும் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புட்டினுடன் தொடர்பில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை மேசையில் போர் முடிவடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில், உக்ரேனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் நேற்று ஒரே இரவில் கொல்லப்பட்டதாக உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் படைகளை திரும்பப் பெறாமல் ரஷியாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரேன் நடத்தாது என அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!