ரணிலிடம் வாக்குமூலம் பெற்றுள்ள குற்றவியல் பிரிவு - பிரபலங்கள் பலர் சிக்கவுள்ளதாக தகவல்

ரணிலிடம் வாக்குமூலம் பெற்றுள்ள குற்றவியல் பிரிவு - பிரபலங்கள் பலர் சிக்கவுள்ளதாக தகவல்

1 mins read
f444ea97-aeb4-4bf6-9491-4c9da823352c
-

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கை காவல் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக இலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 9ஆம் தேதி ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் வீட்டை எரித்தது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டது என அறியப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து இதுவரை சிரச தொலைக்காட்சி குழுமத்தின் தலைவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர் விசாரணைகள் மூலம் பிரபலங்கள் பலர் சிக்கவுள்ளதாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.