சுற்றுப்பயணிகள் 30 நாள்கள் தங்க அனுமதிக்கும் தாய்லாந்து

சுற்றுப்பயணிகள் 30 நாள்கள் தங்க அனுமதிக்கும் தாய்லாந்து

1 mins read
e573efc7-1807-424b-8bf8-8c4383e48139
-

பேங்காக்: தாய்லாந்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, அங்கு செல்லும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் 30 நாள்கள்வரை தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர்.

பொருளியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இவ்வாண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச்வரை இந்த விதி நடப்பிலிருக்கும். வந்திறங்கியபின் விசா பெறும் நடைமுறையின்கீழ் 18 பகுதிகளில் இருந்து வருவோருக்கு இது பொருந்தும்.

அத்துடன், இப்போது 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வருவோர் 30 நாள்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படும் நிலையில், அது 45 நாள்களாக அதிகரிக்கப்படும்.

இதனிடையே, இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதிவரை வெளிநாடுகளில் இருந்து தாய்லாந்திற்கு 3.78 மில்லியன் பேர் வருகைபுரிந்துள்ளனர். இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைக் காட்டிலும் 3,214% அதிகம். அவர்கள் மூலமாகத் தாய்லாந்திற்கு 176.3 பில்லியன் பாட் (S$6.9 பி.) வருமானம் கிட்டியது.