சீனாவில் வறட்சி எச்சரிக்கை

66 ஆறுகள் வறண்டன; கொளுத்தும் வெயிலில் இருந்து பயிர்களைக் காக்க பெருமுயற்சி

பெய்­ஜிங்: சீனா இவ்­வாண்­டில் முதன்­மு­றை­யாக தேசிய அள­விலான வறட்சி எச்­ச­ரிக்கையை விடுத்­திருக்கிறது.

காட்­டுத்­தீயை அணைக்­க­வும் சுட்­டெ­ரிக்­கும் வெயி­லில் இருந்து யாங்ட்ஸி ஆற்­றுப்­ப­டு­கை­யில் பயிர்­களைக் காக்­க­வும் நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்ள நிலை­யில், இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

இந்த தேசிய 'மஞ்­சள்' எச்­ச­ரிக்கை, தென்­மேற்­கே சீச்­சு­வா­னில் இருந்து ஷாங்­காய் நக­ரம் வரை­யி­லும் பல வட்­டா­ரங்­களில் கடந்த பல வாரங்­க­ளா­கவே வெயில் கொளுத்தி வரு­கிறது. பரு­வ­நிலை மாற்­றமே இதற்­குக் கார­ணம் என்று சீன அர­சாங்கம் சொல்கிறது.

மத்­திய சீனா­வின் ஜியாங்சி மாநி­லத்­தில் உள்ள போயாங் ஏரி­யில் இந்­தக் கால­கட்­டத்­தில் வழக்­க­மாக இருப்­ப­தைப்­போல நான்­கில் ஒரு பங்கு அளவே நீர் இருக்­கிறது.

தென்­மேற்­கி­லுள்ள சொங்­சிங் வட்­டா­ரத்­தில் 66 ஆறு­கள் வறண்டு­விட்­டன. சொங்­சிங்­கில் இந்த ஆண்டு மழை 60% குறை­வா­கப் பெய்­துள்­ளது. இத­னால் பல மாவட்­டங்­களில் மண்­ணில் ஈரப்­ப­தம் வெகு­வா­கக் குறைந்­து­விட்­டது.

பெய்­பெய் மாவட்­டத்­தில் நேற்று முன்­தி­னம் 45 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நிலை பதி­வா­னது.

சொங்­சிங் வட்­டா­ரத்­தில் உள்­கட்­ட­மைப்பு, அவ­ச­ர­கால சேவை­கள் கடும் நெருக்­க­டிக்குள்­ளா­கி­இருக்கின்றன. காட்­டுத்தீ கார­ண­மாக தீய­ணைப்­புப் படை­யி­னர் எப்போ­தும் தயார்­நி­லை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

வெப்­பத் தாக்­கத்­தால் பாதிக்­கப்­ப­டு­வது கூடியுள்­ள­தாக அர­சாங்­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடு­மை­யான பாது­காப்பு அபா­யங்­களை எதிர்­கொண்டு வரு­வதால் அடுத்த அறி­விப்பு வெளி­யா­கும்­வரை எரி­வாயு விநி­யோ­கத்தை நிறுத்­தி­வைப்­ப­தாக ஃபியூலிங் மாவட்ட நிர்­வா­கம் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­துள்­ளது.

பாதிக்­கப்­பட வாய்ப்புள்ள பயிர்­களைக் காக்­க­வும் இலை­யு­திர்­கால அறு­வ­டைக்கு முன்­னர் இழப்­பு­களை ஈடு­செய்­யும் வகை­யில் பயி­ரி­டும் பரப்­ப­ளவை விரி­வு­ப­டுத்­த­வும் சொங்­சிங் விவ­சா­யத் துறை வல்­லு­நர் குழுக்­களை அமைத்­துள்­ளது.

வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் விளைநிலங்­களுக்கு கால அட்டவணைப்படி நீர் வழங்க நீர்­வ­ளத்­துறை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

கடும் வெயி­லால் ஜூலை மாதத்­தில் மட்­டும் 2.73 பில்­லி­யன் யுவான் (S$56 மில்­லி­யன்) நேர­டிப் பொரு­ளி­யல் இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் 5.5 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டு உள்­ள­தா­க­வும் சீன நெருக்­க­டி­நிலை அமைச்­சுத் தர­வு­கள் தெரி­விக்­கின்றன.

இத­னி­டையே, தேசிய வானிலை மையம் தொடர்ந்து 30வது நாளாக அதிக வெப்­ப­நிலை சிவப்பு எச்­ச­ரிக்­கையை நேற்று விடுத்­தது. வரும் 26ஆம் தேதி­யில் இருந்து வெப்ப அலை குறை­யத் தொடங்­கும் என்று அம்­மை­யம் முன்­னு­ரைத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!